பூகம்பத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் தவளை
பூகம்பம் ஏற்படுவதை முன் கூட்டியே தவளைகள் கண்டுபிடித்து விடுவதாக தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளை கள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றார்.
இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக கண்டுபிடித்து உள்ளார்.
இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் உள்ள ஏரியில் வாழும் தவளைகள் குறித்து ராஜெல் கிரான்ட் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
பூகம்பம் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த தவளைகள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 5 நாட்களுக்கு முன்பு 96 சதவீத ஆண் தவளைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. 3 நாட்களுக்கு முன்பு அனைத்து தவளைகளும் வெளியேறி சென்று விட்டன. பின்னர் பூகம்பம் முடிந்து 6 நாட்க ளுக்கு பிறகு அதே ஏரிக்கு திரும்பி வந்துவிட்டன.
இதைவைத்து பார்க்கும் போது தவளைகள் முன் கூட்டியே நில நடுக்கத்தை கண்டுபிடித்து விடுகின்றன என்று அவர் கூறுகிறார்.
அந்த தவளைகள் பூகம்பத்துக்கு பிறகு 6 நாட்கள் கழித்து திரும்பி வந்தன. இந்த 6 நாட்கள் வரையிலும் பூகம்பத்துக்கு பிறகு ஏற்படும் சிறிய அளவிலான அதிர்வுகள் இருந்து கொண்டிருந்தன. தவளைகள் திரும்பி வந்த பிறகு அதிர்வுகள் கூட நின்று விட்டன. எனவே தவளைகள் சிறிது அதிர்வையும் முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாகவும் அவர் கூறினார்.
எலி, பாம்பு, மீன்கள், எறும்பு போன்றவையும் பூகம்பத்தை முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாக ஏற்கனவே தகவல்கள் வந்துள்ளன.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||