சமச்சீர் கல்வியை குறை கூறுவதா?
விழுப்புரம், அக். 13: சில உலக மகா நடிகர்களும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளும் சமச்சீர் கல்வியை குறை கூறி வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி குற்றம் சாட்டினார்.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் டி.கதிரவன் தலைமை தாங்கினார். இலவச சைக்கிள்களை வழங்கி உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேசியது:
முதல் கட்டமாக தமிழக அரசு 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துகிறது. எந்த விஷயத்தையும் படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். ஏற்கெனவே கட்டாய தமிழ் கல்வி என்று சட்டம் போட்டு சிலர் நீதிமன்றம் சென்றனர். தமிழ் வழிக் கல்வி மீது மக்களிடம்தான் மன மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
சமச்சீர் கல்வியில் தமிழ் வழி, ஆங்கில வழி இரண்டும் படிப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் விரும்பும் மொழியில் கற்கலாம். ஆனால் கட்டாயம் தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும். ஆனால் சில உலக மகா நடிகர்களும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளும் சமச்சீர் கல்வியை குறைகூறி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். விழுப்புரம், திண்டிவனம் பகுதியில் பொறியியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். விழுப்புரம் அருகே மருத்துவக் கல்லூரியும், திருக்கோவிலூர் அருகே அரசு தொழில் நுட்ப கல்லூரியும் தொடங்க உள்ளோம் என்றார்.
இந் நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி, கண்டமங்கலம் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், விழுப்புரம் நகர் மன்ற தலைவர் ஆர்.ஜனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நவம்பர் 23-ல் தேசிய குழந்தைகள் திரைப்பட விழா
விழுப்புரம், அக். 29: விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் திரைப்பட விழா நவம்பர் 23 முதல் டிசம்பர் 4-ம் தேதிவரை நடைபெறுகிறது. இவ் விழாவுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 25 திரையரங்குகளில் 50 குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இலவசமாக திரையிடப்பட உள்ளன.
இவ் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி தலைமை தாங்கி பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழாவை நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதிவரை (சனி, ஞாயிறு தவிர்த்து) நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். இவ் விழா பள்ளி மாணவர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 25 திரையரங்குகளில் 50 காட்சிகள் நடத்தப்படும். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இலவசமாக கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத் திரைப்படத்தில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளும் கண்டு களிக்கலாம்.
இப் படக் காட்சியை நடத்தும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் காட்சிக்கு ரூ.500 வீதம் செலவுக்காக வழங்கப்படும். நீதிக்கதைகளை போதிக்கும் செல்லம், சுந்தரகாண்டம், மகாபாரதம், ஹயத், அதிசய கோட், மல்லி போன்ற திரைப்படங்கள் இத் திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
முதன்மைக் கல்வி அலுவலர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் அமைக்கும் பயணத் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் ஆசிரியர்களுடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள். காவல் துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக் காட்சிகளுக்கு மாணவர்களிடம் எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.
இதற்காக அச்சிடப்பட்ட டோக்கன் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
இக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, குழந்தைகள் திரைப்பட மையத்தின் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், மஞ்சுளா, வனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம் கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா
செஞ்சி, ஆக. 25: திண்டிவனம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா செஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் கல்வி மாவட்ட உடற்றிறக் கழகம் செஞ்சி கிளை மைய விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா செஞ்சி புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 19 முதல் 22 வரை 4 நாள்கள் திண்டிவனம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த செஞ்சி, கணக்கன்குப்பம், தேவதானம்பேட்டை, செவலபுரை, மேல்ஒலக்கூர், மேல்மலையனூர், தேவனூர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் செஞ்சி புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திங்கள்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி முதல்வர் பிலோமினா வரவேற்றார். விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் பி.குப்புசாமி தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கணேசமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர் கோ.சண்முகம், உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர்கள் ஹரிதாஸ், ஜோசப் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி ஆசிரியருக்கு அம்பேத்கர் விருது
திருக்கோவிலூர், ஜன. 15: அம்பேத்கர் பெல்லோஷிப் விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
÷திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித பாடப்பிரிவு ஆசிரியராக பணிபுரிபவர் ராமதாஸ். இவருக்கு டில்லியில் நடைபெற்ற பாரதிய தலித் சாகித்ய அகாதெமி தேசிய மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் பெல்லோஷிப் விருது வழங்கப்பட்டது.
÷இதையடுத்து நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி ராமதாûஸ பாராட்டிப் பேசினார். அப்போது தமிழாசிரியர் கழக செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கம் தொடக்கம்
விழுப்புரம், ஜன.5: விழுப்புரம் ஏழுமலை தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் இணைந்து தொழிற்சாலை தேவைகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் 5 நாள்கள் நடைபெறும் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
கல்லூரிச் செயலர் எஸ். செல்வமணி தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கின் தொடக்க விழாவில் நிர்வாக அலுவலர் வி. கணேசன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. குப்புசாமி சிறப்புரையாற்றினார்.
உளுந்தூர்பேட்டை சாரதா கல்லூரியின் பேராசிரியைகள் பிரேமபிராணாமாஜி, நிஷ்கன்யா பிராணாமாஜி, கல்லூரி முதல்வர் டி.கே. முத்துகுமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் ஆர். காஞ்சனா நன்றி கூறினார்.
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சிறுசேமிப்பு மூலம் ரூ.68 கோடி வசூல்
விழுப்புரம், அக். 30: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுசேமிப்பு மூலம் ரூ.68 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தெரிவித்தார்.
உலக சிக்கன நாளையொட்டி, இங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
இம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.130.13 கோடி வசூல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை ரூ.68 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சிறுசேமிப்பில் வசூலாகும் தொகை நீண்ட கால கடனாக மாநில அரசுக்கு கிடைக்கிறது. இதைக் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், சாலை மேம்பாடு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். இம் மாவட்டத்தின் சிறுசேமிப்பு வளர்ச்சிக்கு 882 முகவர்கள் முதுகெலும்பாக உள்ளனர். விழுப்புரம் மாவட்ட முகவர்களுக்கு நடப்பாண்டில் மட்டும் ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் இடையே சிறுசேமிப்பின் அவசியத்தை எடுத்து கூறும் வகையில் பேச்சு, கட்டுரை, நாடகம், நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது பாராட்டுக்குரியது. அனைத்துத் தரப்பு மக்களும் சிறுசேமிப்பில் முதலீடு செய்து வீட்டுக்கொரு அஞ்சலகக் கணக்கைத் தொடங்கி, தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக இம் மாவட்டத்தை மாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர். முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி, செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் மு. பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) டி.தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மருத்துவக் காப்பீடு குறித்து விளக்கம்
விழுப்புரம், நவ. 2: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 243 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 2.16 லட்சம் மாணவ, மாணவியருக்கு உயர் சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர்
ஆர்.பழனிச்சாமி தெரிவித்தார்.
விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இறைவணக்கக் கூட்டத்தில் ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி பேசியது:
உயிர் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினால் மக்கள் மத்தியில் சென்று சேரும்
என்பதால்தான் இத் திட்டம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசுகிறோம்.
இத் திட்டத்தின் மூலம் 51 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். ஒரு குடும்பத்துக்கு நான்கு ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் ரூபாய்
வரை மருத்துவச் செலவுக்கான காப்பீடு வழங்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் இத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத் திட்டத்துக்காக புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதற்கான முகாம்களில் புகைப்படம் எடுக்க தவறியவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு ஓராண்டு வரை தொடர்ந்து செயல்படும் தாலுக்கா
அலுவலகங்களில் புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.
அதுவும் தவறினால் நான்கு ஆண்டு வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கலாம்.
இத் திட்டம் குறித்து மேலும் அறிய விரும்புபவர்கள் "1070' என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இத் தி
ட்டத்தில் குறைகள் இருந்தால் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம். அவர் முதன்மைக் கல்வி அலுவலர்
மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
இதுபோல் மாவட்டத்தில் உள்ள 243 அரசுப் பள்ளிகளிலும் உள்ள 2.16 லட்சம் மாணவர்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பெ.குப்புசாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனிச்சாமி, மாவட்ட கல்வி
அலுவலர் (பயிற்சி) சாந்தி, தலைமை ஆசிரியர் பியூலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரசு மகளிர் பள்ளி ஆண்டு விழா
விழுப்புரம், பிப்.6: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில், கடந்த 10-வது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ் அண்மையில் பரிசளித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேர்வுகளில் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசளிக்கப்பட்டது.
மேலும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியை பிரபலா ஜெபீகராராஸ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எ. அந்துவான் பிலோமினா, துணைத் தலைவர்கள் ஜே. ரகுபதி, ஏ.சி. குமார், நா. பழனிராசு, இணைச் செயலர் வி. ரவிசந்திரன், உறுப்பினர் எம். சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உதவித் தலைமையாசிரியர் ஜி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.
பட்டதாரி ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
விழுப்புரம், நவ. 3: விழுப்புரம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் மனுகாந்தி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கலியபடையாட்சி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசேகரன், கண்டமானடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சீதாராமன் ஆகியோர் தலைமையில் இப் பணிகள் நடைபெற்றன.
கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் 205 பேருக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. முதன்மைக் கல்வி அலுவலர் செ.குப்புசாமி ஆய்வு செய்தார்.
ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு: 23 பேர் பிடிபட்டனர்
கடலூர், ஜூன் 25: ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வில் காப்பி அடித்ததாக வியாழக்கிழமை ஒரே மையத்தில், 23 மாணவர்கள் பிடிபட்டனர்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வியாழக்கிழமை ஆங்கிலத் தேர்வு நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் டி.வி.சி. மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சி.எஸ்.ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜெயந்தி பத்மநாபன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் 300 பேர் தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வு மையத்தை தேர்வு கண்காணிப்பு அலுவலரான, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி ஆய்வு செய்தார். அப்போது தேர்வில் காப்பி அடித்ததாக 23 மாணவர்கள் பிடிபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு
கடலூர், ஜூன் 15: கடலூர் மாவட்டத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் தேசிகாபிரியதர்ஷினி (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம். 1160 மதிப்பெண்கள்) நிதி உதவிபெறும் பள்ளிகளில் கே.ரேவதி (புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, கடலூர். 1154 மதிப்பெண்கள்), மெட்ரிக் பள்ளிகளில் ஜி.கார்த்திக் (ஜவகர் மெட்ரிக் பள்ளி, நெய்வேலி. 1177 மதிப்பெண்கள்) ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆர்.சிவசக்தி (அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, சேமக்கோட்டை. 978 மதிப்பெண்கள்) ஆகியோர் முதலிடங்களைப் பெற்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் கே.தனலட்சுமி (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர். 487 மதிப்பெண்கள்) நிதி உதவிபெறும் பள்ளிகளில் எஸ்.கலைவாணி (புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, கடலூர். 492 மதிப்பெண்கள்), மெட்ரிக் பள்ளிகளில் ஆர். கணேஷ்குமார் (லட்சுமி சோர்டியா மெட்ரிக் பள்ளி, திருப்பாப்புலியூர் 483 மதிப்பெண்கள்), ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் டி.சரத் (அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம். 461 மதிப்பெண்கள்) ஆகியோர் முதலிடங்களைப் பெற்றனர்.
பிளஸ்-2மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வுகளில் அனைத்துப்பள்ளிகளிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் மற்றும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் ஆக மொத்தம் 43 மாணவ, மாணவியரை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், முகாம் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வரவழைத்து சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10-ம் வகுப்பு தேர்வுகள் 42,322 பேர் எழுதுகின்றனர்
விழுப்புரம், மார்ச் 22: 10-ம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பொதுத்தேர்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு 128 மையங்களில் மார்ச் 23-ம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரையிலும், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத்தேர்வுகள் 9-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இதில் 10-ம் வகுப்பு தேர்வில் 42,322 மாணவ, மாணவிகளும், மெட்ரிகுலேஷன் தேர்வில் 3,153 மாணவ, மாணவிகளும், ஆங்கிலோ இந்தியன் தேர்வில் 162 மாணவ, மாணவிகளும், ஓ.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 180 மாணவ, மாணவிகளும் எழுதுகின்றனர்.
இத்தேர்வுகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி தலைமையில் ஆசிரியர்களைக் கொண்ட 3 பறக்கும்படை குழுக்களும், விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி தலைமையில் 10 பறக்கும் படை குழுக்களும், திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் எம். கலியபடையாட்சி தலைமையில் 10 பறக்கும் படை குழுக்களும், மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
பொதுத்தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நேரத்தில் மாணவர்களை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உணவு மற்றும் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் நல்லமுறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற வாழ்த்துகிறோம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை முறையீட்டு மனுக்கள் சி.இ.ஓ., - டி.இ.ஓ.,அலுவலகத்தில் பெறப்படும்
பள்ளிக் கல்வித்துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் மாதத்தில் 2வது சனிக்கிழமை டி.இ.ஓ., அலுவலகத்தில் பெறப்படும்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித்துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் டி.இ.ஓ., சி.இ.ஓ., நிலையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அவை தொடர்பான நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு உரிய பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இவர்களின் நலன் கருதி குறை தீர்க்கும் நாளில் மனுக்கள் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையும், சி.இ.ஓ., நிலையில் ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமையும் மனுக்கள் நேரில் பெறப்படும்.
மனுக்களின் மீது விதிகளின்படி பரிசீலனை செய்து இறுதி ஆணை அல்லது உரிய பதிலினை மனுதாரருக்கு அதே நாளில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கை மனுக்கள் மீது பதில் அளிக்கப்படாத நிலை ஏற்படும்போது, மனுதாரர்களுக்கு தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆட்படுத்தப்பட்டு போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையும், கோர்ட்டுகளில் வழக்கு தொடுக்கின்ற நிலையும் ஏற்படுகிறது.
இதனால் பலர் சென்னைக்கு நேரில் சென்று முதல்வர், கல்வி அமைச்சர், அரசு செயலர், இயக்குனர்களை நேரில் சந்தித்து முறையீட்டு மனுக்கள் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு அரசு துறை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
""தேன்தமிழோசையை பரப்புவதில்சீன வானொலியும் முக்கிய பங்கு
வகிக்கிறது,'' என மாவட்ட முதன்மைக்
கல்வி அதிகாரி பாராட்டினார்.
"அனைத்து இந்திய சீன வானொலி நேயர்கள் மன்றம்' மற்றும் ஈரோடு
சீன வானொலி நேயர்கள் இணைந்துநடத்திய ஐம்பெரும் விழா ஈரோடு
வேளாளர் கல்லும்ரியில் நேற்று நடந்தது.மாவட்டத் தலைவர் செல்வம்
தலைமை வகித்தார். பொருளாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி பேசியதாவது:
இந்தியா, சீனா நட்புறவு ஆண்டு விழாவும்இங்கு கொண்டாப்படுகிறது.
தற்போது சீன அதிபர் இந்தியாவந்துள்ளார்.சீனா வானொலி சார்பாகவும்
நிகழ்ச்சிகள் நடக்கின்றன.தமிழகத்தில் தோன்றிய தலைவர்களும், கவிஞர்களும் தேன் தமிழோசைஉலகமெலாம் பரவ பாடுபட்டது போல்,
சீன வானொலியும் தமிழின் புகழை பரப்பி வருகிறது.
இந்திய, சீன நட்புறவு மேன் மேலும்
தொடர இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடந்து நடைபெறுவது அவசியம்.
இதன் மூலம் இரு நாடுகளிடையே மொழி, கலாச்சாரம், நட்புறவு வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சீன வானொலி தெற்காசிய
மொழிகள் பிரிவு துணைத் தலைவர்
சுன் ஜியான் ஹி, தமிழ் பிரிவு தலைவர் கலையரசி ஜூ ஜூவான் குவா,
நேபாளபிரிவு தலைவர் ஜங் யு, சிங்கள மொழி
பிரிவு துணைத் தலைவர் செங் லி,
முன்னாள் சீன வானொலி நிபுணர்
கடிகாசலம், ரெட்கிராஸ் கவுரவ
செயலாளர் தாமஸ் ஜான் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாக செயலாளர் பரமசிவம்
நன்றி கூறினார்
தேர்வில் காப்பியடித்த மாணவர் வெளியேற்றம்
பிளஸ் 2 தேர்வில் புதன்கிழமை நடைபெற்ற கணிப்பொறி அறிவியல் தேர்வில் திண்டிவனம், வால்டர் ஸ்கடர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துண்டுச் சீட்டை பார்த்து தேர்வு எழுதிய மாணவர் வெளியேற்றப்பட்டார்.
÷மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. குப்புசாமி தலைமையிலான பறக்கும் படையினர் அந்த மாணவரை பிடித்து வெளியேற்றி, மேல்நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.
தமிழக கல்வித்துறை அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம்!
சென்னை: தமிழ்நாட்டில் முதன்மைக் கல்வி அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
10 பள்ளிக் கல்வி அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள உத்தரவில்...
ஜி.ராஜலட்சுமி- ஊட்டி முதன்மைக் கல்வி அதிகாரி
வி.பாலமுருகன்- திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அதிகாரி
எஸ்.அசோகன்- திருவண்ணாமலை கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி
கே.ராஜராஜன்- சேலம் முதன்மைக் கல்வி அதிகாரி
சி.அப்பாத்துரை- தஞ்சை கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி
ஆர். மல்லிகா- நாமக்கல் முதன்மைக் கல்வி அதிகாரி
பி.குப்புசாமி- விழுப்புரம் முதன்மைக் கல்வி அதிகாரி
பி.ஏ. நரேஸ்- சென்னை முதன்மைக் கல்வி அதிகாரி
சி.அமுதவல்லி- கடலூர் முதன்மைக் கல்வி அதிகாரி
டி.பெரியசாமி-நாகர்கோவில் முதன்மைக் கல்வி அதிகாரி(அனைவருக்கும் கல்வி)
எஸ்.ராஜாராமன்- ஈரோடு கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி)
எஸ். உமாராணி- சேலம் கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி(அனைவருக்கும் கல்வி)
எஸ்.ஆர்.சிவஞானம்- கரூர் கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி(அனைவருக்கும் கல்வி)
ஆகிய அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.
பள்ளிக்கல்வி ஆய்வாளர்களாக இருந்தவர்கள் 10 பேர் முதன்மைக் கல்வி மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
அவர்கள் பட்டியல்
எஸ். சீனிவாசன்-கடலூர், ஏ.முண்டையன்-புதுக்கோட்டை, வி.சரஸ்வதி-காஞ்சிபுரம், பி.காஞ்சனா-ஊட்டி, எம்.விஜயகுமாரி-திருச்சி, ஜி.வசந்தகுமாரி-இராமநாதபுரம், எஸ்.தேன்மொழி-அரியலூர், என்.திருநாவுக்கரசு-தருமபுரி, சி.சக்கரபாணி-பெரம்பலூர், ஜி.ரஜினி ரத்னமாலா-மதுரை, ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்று அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Transfer counselling for teachers
ERODE: The Secondary Grade and Post-Graduate teachers' transfer counselling would be conducted on June 24 and 25 in Erode district. In a press release, the Chief Educational Officer, P. Kuppusamy, stated that the Director of School Education had announced the guidelines to be followed in the general transfer of teachers.
Accordingly, those who seek local and district-level transfers may apply to the Chief Educational Officer, Erode, on or before June 22 and the applications would be considered at the counselling meeting. - Staff Reporter
Planned hard work paid: toppers
THE WINNER: P.K. Gayathri, who stood first in Erode district in the Plus Two exam, receiving a prize from Chief Educational Officer P. Kuppusamy on Monday. - Photo: M. Govarthan
ERODE: "I am not studious, but when I study I pay attention to details," said P. K. Gayathri, one among the two toppers in the Erode district in the Plus Two examination, the results of which were declared on Monday.
Gayathri of Bharathi Vidya Bhavan, Thindal, shares the distinction with B. Arun of Ideal Matriculation Higher Secondary School, Anthiyur. The toppers have scored 1,164 out of 1,200.
The district topper does not want to be labelled studious. "I do study but not for long."
To augment the teaching at school, the girl went for tuitions in Maths, Physics and Chemistry. This has perhaps helped her secure a centum in Maths.
She attributes her success to her school and parents. The school, she said, helped her write as many tests as possible after asking her to read and re-read lessons a number of times, and the parents adjusted their schedule to suit hers.
Future plans
Gayathri wants to be an engineer in either electronics or communication or computer science. Securing the third place is M. S. Meenamani of Jaycees Matriculation Higher Secondary School, Erode, with the total 1,162. For her it was systematic preparation that catapulted her to the third place. "Every morning I studied for about two hours and slogged it out for five hours every evening." Meenamani expected a centum in Maths and got one. Her expectation in Physics, however, did not materialise, as she had to settle in for 194. This daughter of a farmer hopes to become a software engineer.
K. Balaji of Navarasam Matriculation Higher Secondary School, Palliyuthu, holds the district second rank. He and the first rank holder, Mr. Arun, were not available.
Inculcate reading habit, parents told
RICH VARIETY: The District Collector, D. Karthikeyan (left), after inaugurating a book festival in Erode on Thursday, going round the stalls along with the Correspondent of Bharatiya Vidya Bhavan, P. K. Krishnaraj Vanavarayar (third from right). 51; Photo: M. Govarthan
ERODE: A good book reforms a man and makes him great, said the Correspondent of Bharatiya Vidya Bhavan, Coimbatore, P.K. Krishnaraj Vanavarayar, on Thursday while speaking at a book festival organised by the People Thinkers' Forum.
He urged the youth to be patriotic and be ready to sacrifice for the country. "Each person should strive for social development," he added.
Appealing to the people of Erode to visit the 10-day book festival, he said that the visitors should buy at least one book each, as lakhs of books for different categories of readers are on display. He urged the educational institutions to bring their students to the festival and encourage them to develop reading habit.
`Serve the country'
Quoting the select essays of Swami Vivekananda, Mahatma Gandhi and President A.P.J. Abdul Kalam, he wanted the students and youths to serve the country.
Inaugurating the fair, the Collector, D. Karthikeyan, said he could become an IAS officer by going to libraries and reading books. He wanted the parents to inculcate reading habit in children. Now, students were hooked to television channels, he said and hoped that soon they would defect to book reading.
because of attending the libraries and reading books, he would become an IAS office.
Presiding over the function, the Correspondent of Sengunthar Educational Institutions said that in every house a mini library could be formed with at least 20 select books. The Superintendent of Police, P. Balasubramanian, the president of South India Book Publishers and Sellers Association, R. Muthukunmarasamy and the Chief Educational Officer, P. Kuppusamy, also spoke.
The organiser of the expo and president of People Thinkers' Forum, T. Stalin Gunasekaran, said that it was the first time such a book festival was organised in Erode. A total of 75 bookstalls have been set up at the venue and in the evenings, eminent cultural and Tamil speakers will address the gathering. Ten per cent discount will be given for all the books and for educational institutions and libraries, it will be 20 per cent. "It has been planned to conduct the fair every year," he added.
Cuddalore Collector felicitates school toppers
District toppers in SSLC and Plus-Two examinations with Collector and officials at a felicitation function in Cuddalore on Monday.
CUDDALORE: District Collector P. Seetharaman felicitated district toppers in the Plus Two and Secondary School Leaving Certificate Examinations held in March-April 2009 at a function here on Monday.
The Collector gave away certificates to them. They included the toppers in the Adi Dravida Schools.
The winners in the Plus Two category were R. Sivasakthi (Most Backward Class) of the Government Adi Dravida Welfare School at Semakottai who scored 978 marks out of 1200; R. Veeramani (Scheduled Caste) of Melavanniyur school who secured 970; and T. Venkatesan (SC) of Seppakkam school who scored 959.
The winners in the SSLC category were D. Sarath (SC) of Chidambaram Nandanar Government HSS (461/500); D. Kowsalya (MBC) of Chidambaram Nandanar School (458/500); K. Saranya (OB) of Seppakkam school (458/500); and K. Sriram (SC) of Dharmanallur school (456/500).
The State toppers in fishery resources subject are S.Vallathal (585 marks), S. Manikannan (574) and K. Vinothkumar (567) of St. David Mat. HSS at Cuddalore Old Town.
District Revenue Officer S. Natarajan and Chief Educational Officer P. Kuppusamy were present. The officials called upon the students to repeat their performance in higher studies also.
Girls outbid boys in Erode district
Pass percentage rises by 4.64 compared to the previous year
ERODE: Girl students have performed well in the SSLC examinations in Erode district. The Chief Educational Officer, P. Kuppusamy, said that of the 27,239 candidates appeared for the examinations, 12,437 girls and 12,035 boys students came out successfully. The pass percentage was 89.84 - 4.64 per cent higher than the last year.
Mr. Kuppusamy said 132 were Government schools, where 14,298 students appeared for the examination and 12,320 students came out successfully. The pass percentage was 86.17 - 6.62 per cent more than the last year's. The welfare school run by the Government in Thalawady has secured 93.02 per cent pass - 39.17 per cent more than the last year's.
Among the 121 matric schools, which have sent 4,381 students for the examination, 4,225 passed (96.44 per cent). But this was 1.56 per cent less than the last year's. The lone Anglo-Indian school in Erode secured 87.61 per cent pass, down by 3.62 per cent than the last year's.
Municipal schools
Municipal schools, which failed to obtain good pass percentage in the Plus Two examinations, fared better in the SSLC examinations. Of the 1049 students from eight Municipal Higher Secondary Schools who appeared for the examination, 832 came out successfully. The pass percentage was 79.31 percent - 3.22 per cent more than the last year's.
From the 34 self-financing schools in the district, 1,579 candidates appeared for the examinations. Of this, 1,530 passed (96.90 per cent). This was 1.91 per cent higher than the last year's.
From the aided schools, 5776 candidates appeared for the examination and 5426 passed. The pass percentage was 93.94 - 3.91 per cent more than the last year's.In the Erode Educational District, which has 199 schools, the pass percentage was 90.48 - up by 3.63 per cent than the last year's. In the Gobi Educational District, which has 135 schools, the pass percentage was 88.91 - 6.17 per cent higher than the last year's.
100 per cent pass
Mr. Kuppusamy said that out of 334 schools in the Erode Revenue district, 121 secured 100 per cent pass, 219 secured 90 per cent pass.
District improves performance in Plus-Two examinations
33 schools secure cent per cent pass
THE TOPPERS: (from left) P. Aravind, State first in statistics and also district topper; V. K. Siva Balan, district second and State third in statistics; G. Kannan Vikas and C.T. Kumar Palaniappan, third rank holders, all from Bharathi Vidya Bhavan, Thindal. - Photos: M. Govarthan
ERODE: The district has put up an impressive pass percentage, bettering its performances in the Plus-Two examinations, the results of which were declared on Monday.
Announcing the results, Collector T. Udayachandran, along with Chief Education Officer P. Kuppusamy, said the pass percentage was 90.84, up by 6.67 points.
In the 2006 higher secondary results, the district had 84.17 per cent, and in 2005, it posted 85.57 per cent.
In Erode district too, girls outshined the boys in performance. Of the 10,842 girls who appeared for the exam, 10,024 emerged successful, posting 92.46 per cent. And, of the 9,956 boys, 8,869 cleared the exam, giving 89.08 per cent.
Likewise, the number of schools that have improved their performances has also increased. According to Mr. Kuppusamy, 57 Government-run schools have enhanced their pass percentage as against 24 matriculation schools. In all, 119 schools have improved their performances.
The number of schools that have secured cent per cent pass is 33, and this comprises 26 Government-run schools and a Government school.
In the last academic year, this number was 18. And, the number of schools that have secured less than 50 per cent pass is one. Last year the figure was four.
Similarly, the number of centum scorers has also increased. This year 2,497 students have scored in various subjects as against the 2,197 in last year.
The maximum number of centum - 875 - is in vocational accountancy. This year again, 105 students have scored 200/200 in mathematics. Last year, it was 40.
First three ranks
The first three ranks in the district this year has gone to the Bharathi Vidya Bhavan Matriculation Higher Secondary School, Thindal. P. Aravind secured 1,177 out of 1,200 to stand first in the district. V.K. Sivabalan followed him with 1,174. G. Kannan Vikas and C. T. Kumar Palaniappan shared the honours for the third rank with 1,172.
Among the Government school students, J. Yamuna of Government Higher Secondary School, Sivagiri, secured 1,148. B. Prabhakaran of Government Higher Secondary School, Bhavani, took the second spot with 1,141. He shared the second place with G. Karthikeyan of Government Higher Secondary School, Anthiyur.
The third place went to D. Thenmozhe of Government Higher Secondary School, Sivagiri, who secured 1,137 marks. Mr. Udayachandran said Government teachers who helped students excel would be rewarded.
Erode students put up impressive performance in public examinations
TOPPERS ALL: (From left to right, top to bottom) T.Arunaof Kalaimagal Kalvinilayam, Erode; A.Santhosh Kumar of Saratha HSS, Gobichettipalayam; C.Kiran Kumar of Athersh HSS, Paruvachi; P.Keerthana of Athersh HSS, Paruvachi; M.Gomathi of Kalaimagal Kal vinilayam HSS, Erode; N.Pavithra of St.Alloysius HSS, Dharapuram; A.S.Hema of Adarsh, Anthiyur; Preethika Devi K. of BVB Mat. Hr Sec School;31/05/2007:Sneha Jain of BVB Mat Hr Sec School. — Photos: M. Govarthan
ERODE: Erode has yet again proved its mettle in public examinations.
This year, besides producing a State topper in Matriculation examinations, the district has a put up an impressive pass percentage of 92.35, perhaps the second best in the State.
Collector T. Udhayachandran, who with Chief Education Officer P. Kuppusamy announced the results on Thursday, said the current year's result was the best the district has displayed in the past three years.
Girls
This year too girls - 13,593 wrote the exam - have outshone the boys with 94.25 per cent. The boys - 13,628 appeared for the exam - have 90.45 per cent.
As far as the schools' performance, 147 schools have secured cent per cent pass, which is 27 more than last year.
The number of Government schools that enjoy a cent per cent pass is also 27.
In the Matriculation examinations, nearly 80 schools have a cent per cent pass.
And, this time, though, the district topper, who also happens to be the State topper, is not from any of the posh schools.
First rank
G. Aarthy of Kalaimagal Kalvi Nilayam Girls' Mat. Hr. Sec. School has secured the first rank with 1074/1100. A. S. Hema of Adharsh school, Anthiyur, has bagged the second rank with 1062 marks. B.S. Kamala Narayan of Erode Hindu Kalvi Nilayam has secured the third rank with 1060 marks. He shares the spot with K. Preethika Devi and Sneha Jain of Bharathi Vidya Bhavan Mat. Hr. Sec. School.
Among the Secondary School-leaving Certificate (SSLC) stream students, Kalaimagal Kalvi Nilayam once again bags the first spot. T. Aruna did the school proud with her 485/500. She shares the first spot with Santhoshkumar A. of Saratha Higher Secondary School, Gobichettipalayam.
Two students, both from Athersh Higher Secondary School, Paruvachi, share the second spot. Kirankumar C. and P. Keerthana have scored 483.
In addition to this, sharing the third spot with 482 marks are three students - M. Gomathi of Kalaimagal Kalvi Nilayam, N. Pavithra of St. Alloysius Higher Secondary School, Dharapuram, and P. Sankar of Saratha Higher Secondary School.
Among the Government schools, Government Boys' Higher Secondary School, Anthiyur, and Government Girls' Higher Secondary School, Bhavani, share the honours equally.
Karthik G. and P. Anitha have scored 479/500. Three students share the second rank of 477 - Vallikavitha S. of the Bhavani school, and Matheswar an A. and Ramya G., both from Kavindapady boys' and girls' Government school.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||