பருவநிலை மாற்றத்தால், எரிமலை சீற்றம், நிலநடுக்கம்,சுனாமி போன்றவை இனி அடிக்கடி நேரிடலாம் என்று பருவநிலை ஆய்வாளர் தெரிவிக்கிறார். லண்டனிலுள்ள 'ஆன் யு.சி.எல்., ஹசார்ட் ஆய்வு மைய'த்தின் பில் மெக் கைர் என்ற ஆராய்ச்சியாளர் பருவநிலை மாற்றத்தால் பூமியில் ஏற்படும் பேரழிவுகள் குறித்து ஆய்வு செய்கிறார். இதுபற்றி அவர் கூறுவதாவது:
பருவநிலை மாற்றம் இனி பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிகழக் கூடியவை சில நூற்றாண்டுகளிலேயே நிகழ்ந்து விடும். இதற்காக, பருவநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது கூட கட்டாயம் இல்லை. சிறிய அளவில் ஏற்படும் மாற்றம் கூட பேரழிவுகளை உருவாக்கும்.
கிரீன்லாந்து, அண்டார்டிகா போன்ற இடங்களில் பல கி.மீ.,களுக்குப் பரவி கிடக்கும் ஐஸ் மலைகள் உருகுவதால், பூமியின் மீதுள்ள அடுக்குகள் தம் எடையை இழக்கும். அதனால் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும். தைவானில் சமீபத்தில் திடீரென குறைந்த காற்றழுத்தத்தால் சூறாவளி ஏற்பட்டது. இந்தச் சூறாவளிதான் நிலநடுக்கத்தையும் உருவாக்கியது. இதுபோல சிறிய மாற்றங்கள் பருவநிலையில் ஏற்பட்டால் கூட எரிமலை சீற்றம், நிலச்சரிவு போன்றவை அடிக்கடி நிகழும். வெப்பம் அதிகரிப்பதால், மலைப் பகுதிகளிலுள்ள ஐஸ் ஏரிகள் உடைப்பெடுத்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதோடு நிலச்சரிவும் நடக்கும். இவ்வாறு மெக் கைர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||