'பொறுமை, விடாமுயற்சி, சுயமரியாதை இவை அனைத்தும் உங்களின் பாதையை வெற்றிப் பாதையாக அமைத்துக் கொள்வதற்கு தூண்டுகோளாக அமையும்' என, மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் அறிவுரை வழங்கினார். ராமகிருஷ்ணமிஷன் மயிலாப்பூர் விவேகானந்தா(தன்னாட்சி) கல்லூரியில் ஏழாவது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் கலந்து கொண்டு, இளங் கலை மற்றும் முதுகலை படிப்பில் பட்டம் பெற்ற 300 மாணவர்களுக்கு பட்டமளித்தார். அதன் பின் அவர் பேசியதாவது:
மாணவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையை, விவேகானந்தர், மகாத்மா காந்தி, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் போல, சிறப்பாக நல்வழிகளில் அமைத்துக் கொள்ள வேண்டும். படித்து முடித்ததும், உடனடி வேலைவாய்ப்பு பலருக்கு கிடைக்கும்; சிலருக்கு காலதாமதம் ஆகலாம். இதற்காக கவலைப்படக் கூடாது. தடைகளை படிக்கற் களாக நினைத்து முன்னேற வேண்டும். சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொறுமை, விடாமுயற்சி, சுயமரியாதை இவை அனைத்தும், உங்களின் பாதையை வெற்றிப் பாதையாக அமைத்துக் கொள்வதற்கு தூண்டுகோளாக அமையும்.மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம், ஆளுமை முக்கியம். பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். கல்லூரி படிப்பு, உங்களின் கல்வி முன்னேற்றத்திற்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கும். கல்வி, மனிதனை சிந்திக்க வைத்து நினைத்த இலக்கை அடைவதற்கு தூண்டுகோளாக இருக் கும். உழைப்பால் முன்னேறும் போது, மற்றவர் களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கின்ற மனப் பான்மை வேண்டும். நிர்வாக திறமையை வளர்த்துக் கொண்டு துணிச் சலாக முன்னேற வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகின்ற சிற்பிகள். மாணவர் என்ற தேர் நல்வழியில் பயணம் செய்ய, ஆசிரியர் காட்டும் வழிகாட்டுதல்கள் அச்சாணியாக இருக்கும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||