இந்த நிதியாண்டில், ஐ.டி., டெலிகாம் உள்ளிட்ட பல துறைகளிலும், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இருப்பதாக, சர்வதேச வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எர்னஸ்ட் அண்டு யங், கெல்லி சர்வீசஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், 2010-11 நிதியாண்டில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கி, டெலிகாம், ஐ.டி., ஆகிய மூன்றும் தான், இதில் முன்னணியில் இருக்கின்றன. ஐ.டி., மற்றும் அதன் தொடர்புடையவற்றில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன' என்கிறார் கெல்லி சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் கமல் கரந்த்.டெலிகாம் துறையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளும், உடல் நலம் மற்றும் வங்கித் துறைகளில் முறையே இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் இருப்பதாக கெல்லி மற்றும் எர்னஸ்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
'இவை தவிர, மருத்துவம், அதிகளவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், கல்வி ஆகிய துறைகளிலும், கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன' என்கிறார் எர்னஸ் அண்டு யங் நிறுவனத்தின் தலைவரும் பங்குதாரருமான என்.எஸ்.ராஜன். ரியல் எஸ்டேட், சில்லரை வணிகம், உற்பத்தித் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||