நண்பர்கள் உதவியுடன் பணம் திரட்டி ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் சுப்பிரமணி: என் சொந்த ஊர் காவேரிப்பாக்கம்; சென்னையில் தான் வாழ்க்கை. அப்பா ரயில்வேயில் கடைநிலைத் தொழிலாளி. அப்பாவின் மாத ஊதியம் இரண்டாயிரத்திற்கும் குறைவு. இதில் தான் நான், தம்பி, தங்கை, அம்மா ஆகியோர் வாழ்க்கை நடத்த வேண்டும்.
இந்தச் சிரமமான வாழ்க்கையிலும் நான் படிப்பதை கைவிடவில்லை.டியூஷன் செல்லாமலேயே பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். பிளஸ் 2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று வேலூர் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். என் படிப்பிற்கு நிறைய பேர் உதவினர். அதில் முக்கியமானவர் கல்லூரியில் ஆடிட்டராக இருந்த ராகவன்.வீட்டில் தங்க இடம் கொடுத்து, என்னை அவர் பிள்ளை போல் பார்த்துக் கொண்டார். நான் மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அவர் தந்த உற்சாகத்தினால் முதலாண்டிலிருந்து நான் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்தேன். கல்லூரி இறுதி ஆண்டில் தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற் றேன். அதே ஆர்வத் துடன் எம்.டெக்., - பிஎச்.டி., என்று படித்தேன்.ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் ஹாஸ்டலில் படிக்கும் போது மாணவர்களிடம் உள்ள பழைய நியூஸ் பேப்பர்களை வாங்கி அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவினோம்.இந்த முயற்சிக்கு மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. அதை இன்னும் செயல்படுத்துகிறோம். எனக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஆர்வமில்லை. ஐ.ஐ.டி.,யில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்பது என் விருப்பம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||