காம்பிரியன் யுகத்தில்
தோன்றிய 'பொரி பெரா'
55 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காம்பிரியன் யுகத்தில் தோன்றியதாக கருதப்படும் 'பொரி பெரா'க்கள் மன்னார் வளைகுடா பகுதியில் இன்றும் காணப்படுகின்றன. நீர்நிலைகளில், குறிப்பாக கடலின் அடிப்பகுதியில் வாழும் முதுகெலும்பற்ற உயிரினம் 'பொரி பொரா' . 'புரையுடலிகள்' என அழைக்கப்படும் இவற்றின், உடல் பல செல்களால் ஆனது.
7000 இனங்கள் இவ்வுலகில் இருப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இவை 55 கோடி ஆண்டுகளுக்கு முன், காம்பிரியன் யுகத்தில் தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பல்செல் உயிரிகளில் முதலில் தோன்றிய உயிரினமும் இவை தான். நீரில் மிதக்கும் தன்மை கொண்ட இது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அடித்து செல்லப்படுகின்றன. சில செ.மீ., மட்டுமே வளர்ந்து குறைந்த காலமே உயிர் வாழும். இவற்றின் சில ரகங்கள் மட்டும் எட்டு முதல் 10 ஆண்டுகள் உயிர் வாழும். தங்களின் உடல் எடையை போல ஒரு மணி நேரத்தில் 50 மடங்கு வரை நீரை வெளியேற்றுகிறது. ஆஸ்டியா எனப்படும் பல்வேறு சிறு துளைகள் வழியே வந்து, ஆஸ்குலம் எனும் பெருந்துளை வழியாக நீரினை வெளியேற்றும். நீரில் கரைந்துள்ள நுண்ணிய அங்ககப் பொருட்கள் மற்றும் தாவர நுண் மிதவைகளை இவை உண்டு வாழ்கின்றன.
இவற்றில் சில பாலியலற்ற முறையிலும், சில பாலியல் முறையிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றிலிருந்து சுரக்கும் வேதியியல் பொருளின் நச்சுதன்மையால், பிற உயிரினங்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்கிறது. கடலில் பிராணவாயு கிடைக்கவும், கடல் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தவும், ஊட்டச்சத்துக்கும், சுழற்சிக்கும் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||