6 வயது முதல் 14 வயது வரை
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி
புதிய சட்டம் இன்று முதல் அமல்
6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை என்று கடந்த 2002-ம் ஆண்டு மத்திய அரசு சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.
86-வது சட்ட விதியில் செய்யப்பட்ட இந்த திருத்தம் காரணமாக எதிர் காலத்தில் ஒவ்வொரு இந்தியனும் கல்வி அறிவுப் பெற்றவராக இருப்பார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. பாராளுமன் றத்தில் இந்த சட்டத்திருத்தத் துக்கு கடந்த ஆண்டு ஒப்பு தல் பெறப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்கனவே தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம் ஆகியவற்றை கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது.
அந்த வரிசையில் அனைத் துக் குழந்தைகளுக்கும் கட் டாய இலவச கல்வி கொடுக் கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டத் திருத்தம் செய்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அடிப்படை உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப் பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டத்திருத்தம் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 1 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள். அதற் காக 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளை யும் பள்ளிக்கு அனுப்புவதை மாநில அரசுகள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகள் உறுதி செய்து கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்குட் பட்டவர்கள் சுமார் 22 கோடி பேர் உள்ளனர். இவர் களில் சுமார் 1 கோடி குழந் தைகள் பல்வேறு காரணங் களால் கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் புதிய சட்டம் மூலம் இலவசமாக, கட்டாய மாக கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஊரிலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகளில் யார், யார்? பள்ளிக்கு செல்ல வில்லை என்பதை அந்தந்த பகுதி பள்ளிக் கூடங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் கணக்கெடுப்பு நடத்தி கண்டு பிடிக்கும். பிறகு சிறுவர்கள், அவர்கள் வயதுக்கு ஏற்ப உரிய வகுப்புகளில் சேர்க் கப்படுவார்கள். இதற்காக சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படும்.
இது தவிர கல்வி பெறு வதை அடிப்படை உரிமை யாக்கும் சட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் சேவைக்கும் சில அம்சங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொருளாதாரத் தில் மிகவும் பின்தங்கியவர் களுக்கு தனியார் பள்ளி களில் 25 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால் கிரா மங்களில் வாழும் ஏழை- எளியவர்களின் குடும் பத்து குழந்தைகள் கல்வி பெறுவது 100 சதவீதம் உறுதிப் படுத் தப்பட்டுள்ளது.
இந்த 25 சதவீத இட ஒதுக் கீட்டை எதிர்த்து சில தனியார் பள்ளிகள், மானியம் பெறாத பள்ளிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. பள்ளிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும் வகை யில் இந்த சட்டம் இருப்பதாக தனியார் பள்ளிகள் தங்கள் மனுவில் கூறி உள்ளன. என்றாலும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் எந்த சட்டச் சிக்கலும் வராது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் கூறினார்.
2010-11ம் கல்வி ஆண்டுக் கான சேர்க்கைகள் நாடெங் கும் பெரும்பாலும் நடந்து முடிந்து விட்டது. எனவே தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகள் கல்வி பெற 25 சதவீத இடம் ஒதுக் குவது அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
ஆண், பெண் வித்தியாச மின்றி அனைத்து சிறுவர்- சிறுமி களும் பயன் பெறும் இந்த திட்டத்துக்கான மொத்த செலவில் 55 சதவீ தத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். மாநில அரசுகள் 45 சதவீத செலவை ஏற்கும் மாநில அரசுகள் இந்த சட்டத்தை இடையூறின்றி நிறைவேற்றுவதற்காக மத்திய நிதிக் கமிஷன் ரூ.25 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.
மத்திய அரசின் கணக் கீட்டுப்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு குழந்தை களுக்கு கட்டாய, இலவச கல்வி கொடுக்க 1.71 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிய வந்துள்ளது. நாடெங்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி கொடுத்தே தீர வேண்டும் என்று அரசு தீவிரமாக உள்ளதால் 1.71 லட்சம் கோடி நிதியை திரட்டி விட்டதாக மத்திய மந்திரி கபில்சிபில் கூறினார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி எந்த ஒரு பள்ளியும் 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமி களை சேர்க்க இயலாது என்று சொல்ல முடியாது. மேலும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஒரு வேளை திறமையான ஆசிரியர்கள் இல்லை யெனில் 3 ஆண்டு களுக்குள் நியமித்து விட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.
மேலும் எல்லா பள்ளிக் கூடங்களிலும் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் விளையாடு வதற்கு ஏற்ற மைதானம் மற்றும் கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற விதிகளை அந் தந்த மாநில அரசுகள் உரு வாக்கிக் கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது. சில மாதிரி விதிகளையும் மத்திய அரசு உருவாக்கி, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத் துள்ளது.
யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளுக்கு என தனி விதிமுறைகளை மத்திய அரசு தயாரித்துள்ளது. அந்த விதிகளை சட்ட அமைச்சகம் அடுத்த வாரம் வெளியிட உள்ளது.
புதிய மாதிரி விதிப்படி, உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு வீட்டிலும் சர்வே செய்து 6 முதல் 14 வயது வரை குழந்தைகள் பற்றி தக வல்கள் சேகரிக்கும். பிறகு அருகில் உள்ள பள்ளிக் கூடம் மற்றும் அதில் உள்ள இட வசதிகளை ஆய்வு செய் யும். இதன் மூலம் அனைத் துக் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வது உறுதிப்படுத் தப்படும்.
சாதி, மதம், ஆண், பெண் போன்ற பேதங்கள் பார்க் காமல் குழந்தைகள் அனை வரும், பள்ளிக்கு செல்வது கட்டாயமாக்கப்படும்.
25 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று தனியார் பள்ளிகளில் சேரும் குழந்தைகள், பிரித்து விட்டவர்கள் போல தனி யாக நடத்தப்பட கூடாது என்பதை உறுதி செய்ய வும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. மேலும் எல்லா குழந்தைகளுக்கும் ஏனோ, தானோ என் றில் லாமல் தரமான கல் வியை பெற வேண்டும் என்று புதிய சட்டத்தில் வலியுறுத்தப்பட் டுள்ளது.
இவை தவிர ஏழைக் குழந்தைகள் நடந்து செல்லும் தூரத்துக்குள் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் நடந்து சென்று படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை-எளியவர்களின் எதிர்கால வாழ்வில் ஒளி யேற்றப் போகும் இந்த புதிய சட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு குறும்படம் தயாரித்துள்ளது. இந்த குறும் படங்கள் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||