சிறந்த பல்கலையை தேர்வு செய்வது எப்படி : வெளிநாட்டு கல்வி ஆலோசகர் ஆலோசனை
'கல்வி, திறமையை பொறுத்து தான் சிறந்த பல்கலைக் கழகங் களை தேர்வு செய்ய முடியும்' என வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனர் டாக்டர் பால் செல்வகுமார் பேசினார். தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'வெளி நாடுகளில் சென்று படிப் பது எப்படி?' என்ற தலைப்பில் வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனம் நடத்தி வரும் டாக்டர் பால் செல்வகுமார் பேசியதாவது: வெளிநாட்டு உயர் கல்வி என்பது இந்தியாவில் சாதாரண காரியமல்ல. வெளி நாடுகளில் படிக்கும் சதவீதம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபட்டுள்ளது. அரசியல் தலைவரான மன்மோகன்சிங் வெளி நாட்டில் படித்தவர்தான். அம்பானியும் வெளிநாட்டில் படித்தவர்தான்.
அமெரிக்காவில் 4,000 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவில் 400 பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளன. தனிப்பட்ட மனிதன் கல்வி, திறமையை பொறுத்து தான் உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக் கழகங்களில் தேர்வு செய்து படிக்க முடியும். என்ன படிப்பது என்பது முக்கியம் கிடையாது. எங்கு படிக்கிறோம் என்பது தான் முக்கியமான ஒன்று. அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கனடா போன்ற பல்கலைக் கழகங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஒரு நாட்டிற்குச் செல்லும் போது, அந்நாட்டு மொழி முக்கியம். ஒரு கல்லூரியில் சேரும் போது, அந்த கல்லூரி கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமானது. வெளி நாட்டில் உள்ள தனியார் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வெளியில் வேலை பார்க்கக் கூடாது என்ற நிலை பல இடங்களில் உள்ளது.
கடந்த 2, 3 ஆண்டுகளில் பாஸ்டர் டிசைனிங் படிப்பிற்கு அதிகம் பேர் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். பிளஸ் 2 மாணவர்கள் விமானத் துறையையும் தேர்வு செய்து படிக்கலாம். இந்த துறை எதிர்காலத்தில் நல்ல நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கப்பல் துறையில் வேலை வாய்ப்புகள் ஏராளம்: கேப்டன் சுரேஷ் பேச்சு
'கப்பல் அதிகாரியாக பணியாற்றினால் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என, மதுரை ஆர்.எல்.இன்ஸ்டியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் பேராசிரியர் கேப்டன் சுரேஷ் பேசினார். புதிய தலைமுறை, தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத் தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி சுப லட்சுமி மகாலில் துவங்கி நடந்து வருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியான நேற்று கடல்சார் படிப்புகளைப் படித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து மதுரை ஆர்.எல். இன்ஸ்டியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் பேராசிரியர் கேப்டன் சுரேஷ் பேசியதாவது: கப்பல் துறை தற்போது வளர்ந்து வருகிறது. கடல் வாணிபத்தை யாராலும் அழிக்க முடியாது. கப்பல் மூலம் ஏராளமான பொருட்களை கடல் வழியாக எடுத்துச் செல்கிறோம். கடந்த நூறு ஆண்டிற்கு முன்பு சொல்லும் அளவிற்கு கப்பல்கள் கிடையாது. தற்போது 50 ஆயிரம் கப்பல்கள் உலகம் முழுவதும் செல்கின்றன. கப்பலில் பணியாற்ற பயிற்சி தேவை.
தற்போது பிளஸ் 2 முடித் துள்ள மாணவர்கள் சிந் தித்து, படிப்பை தேர்வு செய்ய வேண்டும். கப் பல் துறையை நம்பிக்கையாக தேர்வு செய்யலாம். கப்பல் பணி என்பது சிறப்பான பணி. கப்பலில் அதிகாரியாகவும், பொறியாளராகவும், மாலுமியாகவும் செல்லலாம். குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். மார்க்கெட்டிங் நிலவரப்படி கப்பல் அதிகாரிகள் அதிகபட்சமாக 7 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். கப்பல் துறையில் வரும் 5 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் கப்பல் பணியாளர்கள் தேவைப் படுவர். இந்த பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக அளவில் கப்பல் படிப்புக்கான இன்ஸ்டிடியூட்கள் உள்ளன. புதுச்சேரியிலும் இன்ஸ்டிடியூட் உள்ளது. சென்னையில் அதிக அளவில் இந்த இன்ஸ்டியூட்கள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., படித்தவர்களும் கப்பலில் மாலுமி வேலைக்கு செல்லலாம். தற்போது கப்பலில் பெண் அதிகாரிகள் அதிக அளவில் பணியாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கப்பலில் உலகத்தைச் சுற்றி பார்ப்பதோடு, நாட்டுக்கு உழைக்கும் ஒரு வாய்ப்பு கிடைத் துள்ளது. கப்பலில் சுற்றுச்சூழல் மாசுபாடு இருக்காது. அனைத்து விதமான பாதுகாப்பும் கிடைக்கிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகள் : கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தகவல்
'தகவல் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்புகள் உள்ளன' என, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார். புதுச்சேரி முத்தியால் பேட்டை சுபலட்சுமி மகாலில் தினமலர் நாளிதழ், புதிய தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியில், எந்த படிப்பை தேர்வு செய்யலாம், எதற்கு நல்ல வேலை வாய்ப்பு என்பது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது: ஐ.டி., துறையில் வேலை வாய்ப்பு கிடைக்காது என்று பலர் தவறான ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர். ஐ.டி., துறை சரிவு என்று சொல் வது பெரிய முட்டாள்தனமானது. 97 சதவீத வேலை வாய்ப்பை ஐ.டி., துறைதான் நிரப்பி வருகிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர் பான படிப்பிற்கு கூடுதல் வேலை வாய்ப்பு உள்ளது. ஐ.டி., படித்த 90 சதவீதம் பேருக்கு அமெரிக்கா வேலை வாய்ப்பு அளிக்கிறது. எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிப் பிற்கு குறைவான வாய்ப்புதான் உள்ளது. மாணவர்கள் வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு கோர்சை தேர்வு செய்ய வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பிற்கு வேலை வாய்ப்பு உடனடியாக கிடைக்கும். கடந்த ஆண்டு மட்டும் 1,000 பேருக்கு மேல் ஐ.டி., துறையில் வேலை கிடைத்துள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களில் 100ல் 20 பேருக்கு மட்டுதான் வேலை கிடைக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு முன் சம்பந்தப் பட்ட கல்லூரிக்கு நேரில் சென்று, அங்கு ஏற்கனவே படிக்கும் மாணவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு சேர்க்க வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைககள் மொபைல்போன் வைத்திருப்பதை தடை செய்ய வேண்டாம். அவர்களுக்கு பிரி பெய்டு இல்லாமல் போஸ்ட் பெய்டு திட்டத்தில் மொபைல் போன் வாங்கிக் கொடுங்கள்.
தமிழகத்திலுள்ள 171 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஆண் டிற்கு 7,500 பேர் வெளியே வருகின்றனர். இதில் 1,500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இதில் 1,000 பேர் ஐ.டி., துறையில் சேர்கின்றனர். வரும் 2014ம் ஆண்டு மட்டும் 28 ஆயிரத்து 800 பேர் படித்துவிட்டு வெளியேறுகின்றனர். இதில் 3,000 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும். மீதமுள்ள 26 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக் காத நிலை ஏற்படும். இவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க 1,500 தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.
மாணவர்கள் தங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பி.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) முதலாவது விருப்பமாக எடுத்துக் கொள்ள வேண் டும். தொடர்ந்து இ.இ.இ., சிவில் இன்ஜினியரிங் (எர்த், கட்டடப் பிரிவு, கடல்சார் பிரிவு), மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட் ரானிக் கம்யூனிகேஷன் என வரிசையாக முன்னுரிமை கொடுக்க வேண்டும். பி.இ., கம்ப்யூட்டர் சயின்சில் டேட்டா ஸ்டோரேஜ் பிரிவிற்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு பிறகு 50 ஆயிரம் சீட் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 70 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது. கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் தனியாக செல்ல வேண்டும், பெற்றோர் களை அழைத்துச் சென்றால் அவர்கள் கருத்தை உங்கள் மீது திணித்து விடுவார்கள்.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஒரு ஆண்டு மட்டும் நன்றாக படித்தால் 50 ஆண்டுகள் நன்றாக வாழலாம். அந்த ஒரு ஆண்டு படிக்கவில்லையென் றால் 50 ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டும். பிளஸ் 2 ரிசல்ட் வந்த பிறகு தினமலர் சார்பில் விழுப்புரத்தில் உன்னால் முடியும் நிகழ்ச்சி நடத்தப் போகிறோம். கல்வி தொடர்பான அனைத்து விளக் கங்களையும் தினமலரின் கல்வி மலர் டாட் காம் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்
மாணவர்கள் விரும்பும் படிப்பை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும் : பேராசிரியர் கண்ணன் அட்வைஸ்
'நடைமுறைக்கு ஒத்துவராத படிப்பை படிக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது' என, பேராசிரியர் கண்ணன் கூறினார். மாணவர்களின் திறமைகளை வளர்த் துக் கொள்ளும் தன்னம் பிக்கை குறித்து மதுரை பேராசிரியர் கண்ணன் பேசியதாவது: பெற்றோர்கள், மாணவர்களின் விருப்பப்படி படிப்பை தேர்வு செய்ய உதவ வேண்டும். நம்முடைய காலத்தில் 'டிவி' இல்லை, 20:20 கிரிக்கெட் மேட்ச் இல்லை. இந்த சூழ்நிலையிலும் மாணவர் கள் அதிகம் மார்க் வாங்குகின்றனர். மாணவர்களின் விருப்பத்திற்கு மாறான கோர்சில் சேர்த்துவிட்டால் அவர் கள் கஷ்டப்பட்டு, மனச்சிதறல் ஏற் பட வாய்ப்புண்டு.
மாணவரும், பெற்றோரும் கலந்து பேசி, படிப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும். மாணவரின் ஒத்துழைப்பின்றி அவர்கள் மீது படிப்பை திணிக்கக் கூடாது. நடைமுறைக்கு ஒத்துவராத படிப்பை படிக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பெற்றோர்கள், மாணவர்களிடம் கடிந்து கொள் ளாமல் விட்டுக் கொடுத்து வழி விடுங்கள். மாணவர்களும் பெற் றோர்களின் கஷ்டத்தையும், சிரமத்தையும் உணர்ந்து படிக்க வேண்டும். காலம் கடந்து யோசிக்கக் கூடாது.
பெற்றோர்கள் தற்போதுள்ள நேரத்தில் மாணவர்களின் பாஸ் போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ், டி.சி., பாஸ் போர்ட் ஆகியவற்றை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமலர் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியை மாணவர்கள் நன்கு உபயோகிப்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு பேராசிரியர் கண்ணன் பேசினார்.
மீடியா துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது : எஸ்.ஆர்.எம். பல்கலை பேராசிரியர் பேச்சு
மீடியா துறையில் வேலை வாய்ப் புகள் அதிகரித்து வருகிறது என எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பேரா சிரியர் பார்த்தசாரதி பேசினார். மீடியா துறையில் பெருகி வரும் வேலை வாய்ப்புகள் குறித்து எஸ். ஆர்.எம். பல்கலைக்கழக பேராசிரியர் பார்த்தசாரதி பேசியதாவது: மீடியா என்பது சினிமா மட்டும் என்று தான் நாம் நினைக்கிறோம். அவ்வாறு நினைக்கக் கூடாது. மீடியா துறையில் வேலை வாய்ப் புகள் அதிகரித்து வருகிறது. இந்த துறையை தேர்வு செய்து படித்தால், பல் வேறு விதமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மக்களுக்கு செய்திகளை சென்று சேர்ப்பதே மீடியா துறை தான். பல நாட்டு செய்திகளையும் மீடியா தான் பரப்பி வருகிறது. ஒரு நாடு வளர வேண்டுமானால், மீடியா வளர வேண்டும். அப் போது தான் நாடு வளரும்.
மீடியாவில் என்ன படிக்கலாம் என, தேர்வு செய்து படிக்க வேண்டும். 2013ல் 14.5 சதவீதம் வரை வேலை வாய்ப் புகள் அதிகரிக்கும். வியாபார நிறுவனங்கள் அதிகரித்து வரும் வேளையில், மீடியாக்களில் விளம்பரங்களும் அதிகரிக்கின் றன. இவ்வாறு அதிகரிக் கும் போது வேலை வாய்ப்புகளும் அதிகம் உருவாகும் சூழ்நிலை உள்ளது.
வெளி நாடுகளில் ஏராளமான சேட்டலைட் சேனல்கள் உள்ளன. இந்தியாவில் 100 சேட்டலைட் சேனல்கள் வர உள்ளன. மீடியாவில் டெலிவிஷன் பிரிவில் டைரக் டர், தயாரிப்பாளர் வரலாம். போட் டோகிராபர் பிரிவில் விளம்பர போட்டோகிராபர், விலங் குகளை படம் பிடிக்கும் போட்டோகிராபர், பேஷன் போட்டோகிராபர் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள் ளன. அச்சு ஊடகத்தில் இதழியல், போட்டோகிராபர், லே அவுட் ஆர்டிஸ்ட் போன்ற பிரிவுகள் உள் ளன. இந்த மீடியா துறையை தேர்வு செய்து படித்தால் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||