தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.14,353 கடன்
தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.14,353 கடன் இருப்பதாக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாத்ததுக்கு பதிலளித்து அவர் பேசியது:
"தமிழக அரசு கடனில் மூழ்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். அரசு கடனில் மூழ்காது. கடனை வைத்து வேறு சிலரை மூழ்கடிப்போம். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செயல்படுத்த பணம் வேண்டும். அரசின் பணத்தில் இருந்துதான் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றால் அதற்கு காலம் ஆகும். அதற்குள் அந்தத் திட்டங்களுக்கான செலவு அதிகரிக்கும். எனவே, திட்டங்களைச் செயல்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யவும் கடன் திரட்டுவதில் தவறில்லை.
தமிழகத்தில் தனிநபர் கடன் பொறுப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது.
மாநிலங்களின் கடன் பொறுப்பைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்துக்கு ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 727 கோடியும், ஆந்திரத்துக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 757 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.79 ஆயிரத்து 644 கோடியும், கேரளத்துக்கு ரூ.70 ஆயிரத்து 117 கோடியும், தமிழகத்துக்கு ரூ.89 ஆயிரத்து 149 கோடியும் உள்ளன.
தனிநபர் கடனைப் பொருத்தவரை, மகாராஷ்டிரத்தில் ரூ.18 ஆயிரத்து 575, ஆந்திரத்தில் ரூ.16 ஆயிரத்து 494, கர்நாடகத்துக்கு ரூ.15 ஆயிரத்து 107, கேரளத்தில் ரூ.21,991, தமிழகத்தில் ரூ.14 ஆயிரத்து 353-ம் உள்ளன.
இந்தியாவின் கடன் அளவு ரூ.35 லட்சத்து 15 ஆயிரத்து 606 கோடியும், தனிநபர் கடன் ரூ.34,231-ம் உள்ளன.
தமிழகத்தில் கடனைத் தீர்க்க முடியாத அளவுக்கு இல்லை. கடனைத் திருப்பிச் செலுத்துவோம். கடன் சுமை கட்டுக்குள் உள்ளது.
பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, மூலதனப் பணம் (திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம்) திருப்பி விடப்படுவதாகக் கூறுகிறார்கள். பற்றாக்குறை முழுவதும் கடனைத் திரட்டுவதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது'' என்றார் நிதியமைச்சர் க.அன்பழகன்.
As for my personel view is concerned the burden of having induvidual debts around 14 thousandas and odd is due to the lacking of long term vision and scheme for creating job to individuals . Instead our people's reps are promoting free schemes without generating avenues for revenue resources.This will make everyone including the reps(undrstood), in nearfuture to be in quandry irreedemably. To surmount the proplem, it is high time that everyone should work cohesively to negate the free schemes for jobs.
ReplyDeleteS.D
vazhu