The first major activity under Rastriya Madhyamik Siksha Abhiyan (RMSA) in Tamil Nadu took place in Tiruchi on Friday with an orientation on computer literacy for 65 District Educational Officers and 325 computer science teachers.
The objective of the day-long programme, ‘training for computer literacy and learning for resource persons’, conducted under the supervision of the Joint Director of School Education – Higher Secondary S. Karmegam, at the Seva Sangam Girls’ Higher Secondary School was to equip students of standard IX and X with basic computer literacy on usage of e-mail facility and accessing websites.
The participating computer science teachers have been vested with the responsibility of transferring the training inputs to two teachers from each school in their respective educational districts. In Tiruchi, the five-day training for school teachers from December 14 onwards will be held at the Saranathan College of Engineering in Tiruchi Educational District, at Imayam College of Arts and Science at Thuraiyur in Musiri educational district and at M.A.M. College of Engineering at Siruganur in Lalgudi educational district, the Chief Educational Officer K. Swaminathan said.
Similar to the Sarva Siksha Abhiyan, the RMSA entails upgrading building facilities, infrastructure and learning resources in high schools. The Centre has allotted Rs. 151 crore for Tamil Nadu under RMSA for this year.
As many as 70 Government High Schools, 59 Government Higher Secondary Schools, two Municipal High Schools, one Corporation HSS, one Tribal Welfare HSS, four Adi Dravida Welfare High Schools, 12 Adi Dravida Welfare Higher Secondary Schools will be covered under the RMSA in Tiruchi district. The benefit of training alone will be extended to 20 Aided High Schools, and 70 Aided Higher Secondary Schools, officials said.
தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரின் மகன் திருமண விழா, கோவையில் நடந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பலர் வாழ்த்தினர். தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமியின் மகன் ராஜாராம், சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கும், கோவை சுபகீர்த்தனா நூற்பாலைஉரிமையாளர் நாகராஜ் மகள் கீர்த்தனாவுக்கும், கோவை ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் உமாநாத், இணை இயக்குனர் கார்மேகம், இளங்கோ, கோவை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் முருகன், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இளங்கோ உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கும் செய்முறை தேர்வு: அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம்
சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகம் ஆவதையொட்டி, தமிழக அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 4,241 அரசு பள்ளிகளிலும் ஆய்வக வசதிகளை மேம்படுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்விக்கு (ஆர்.எம்.எஸ்.ஏ.,) 2010-2011ம் ஆண்டுக்கான செயல் திட்டம் மற்றும் பட்ஜெட் தயாரிப்பு பணிமனை, கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா நான்கு ஆசிரியர்கள் பங்கேற்றுள்ள இந்த உண்டு உறைவிட பணிமனை, ஏழு நாட்கள் நடைபெறுகிறது. பணிமனையை பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) கார்மேகம் துவக்கி வைத்து பேசியதாவது: வரும் 2010-2011ம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதில், 10ம் வகுப்புக்கும் இனி செய்முறை தேர்வுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 2011-2012ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை, இதற்கென ஒன்பதாம் வகுப்பு முதலே தயார்படுத்த வேண்டியது முக்கியம்.இதற்கு அறிவியல் பாடத்திட்டத்தின்படி, பள்ளிகளில் ஆய்வக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள 4,241 பள்ளிகளிலும் ஆய்வக வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மின்சாரம், போன், இன்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டியதும் கட்டாயம்.
தற்போது பள்ளிகளில் வாங்கப்படும் நாளிதழ்களை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வாட்ச்மேன் மட்டுமே படிக்கும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு எந்த வகையிலும் இவை பயன் அளிப்பதில்லை. மாணவர்களின் வாசிப்புத் திறனையும் அறிவுத் திறனையும் மேம்படுத்த, அனைத்து மாணவர்களுக்கும் நாளிதழ்கள் சென்றடைவது முக்கியம்.அனைத்து பள்ளிகளின் புள்ளி விவரங்களையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளின் விவரங்களை மையமாகக் கொண்டு 32 மாவட்டங்களிலும், "பர்சனல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.இவ்வாறு கார்மேகம் பேசினார்.
மாநில கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம்
சேலத்தில் மாநில அளவிலான முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள் சாமி தலைமையில் நடந்தது. சேலம் மாவட்டம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த கூட்டத்தில், 32 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் என 125 பேர் கலந்து கொண்டனர். பணியாளர் தொகுதி இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மேல்நிலை கல்வி இணை இயக்குனர் கார்மேகம், இடைநிலை கல்வி இணை இயக்குனர் தர்ம ராஜேந்திரன், தொழிற்கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி, நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் உஸா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணம் குறைவாக இருந்தால் வெளியேற்றுவது தனியார் பள்ளி : மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் பேச்சு
இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத் திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் பேசினார். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. சி.இ.ஓ., அமுதவல்லி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் வரவேற்றார். டி.எஸ்.பி., பிரசன்ன குமார் விழாவை துவக்கி வைத்தார். டி.இ.ஓ., க்கள் கணேசமூர்த்தி, குருநாதன், மண்டல உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை, சிறுகிராமம் ராஜாராம், பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் ராதாகிருஷ் ணன், ஒன்றிய கவுன்சிலர் அஸ்வத்ராமன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மதுரை போக்குவரத்து டி.ஐ.ஜி., ராஜேந்திரன், பெல் கம்பெனி மேலாளர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணதாசன், முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல் வம், நேஷனல் கல்வியியல் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 50 ஆண்டு கால முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பள்ளி பருவத்தின் அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:
அனைத்து இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத்திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் பாகுபாடு உள்ளது. அரசு பள்ளிகளில் சாதி, மத, பேதமின்றி சமத்துவம் காணப்படும். படிப்பு, பணம் குறைவாக உள்ளவர்களை வெளியேற்றுவது தான் தனியார் பள்ளிக் கொள்கை. ஆனால், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் ஐ.பி.எஸ்., மற்றும் பல் வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தலைமையாசிரியர் கோரியபடி பொருளியல் பணியிட ஆசிரியர் இந்த வாரத்தில் நியமிக்கப்படுவர். மேலும், கல்வித் துறை சார்பில் இப்பள்ளிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இவ்வாறு கார்மேகம் பேசினார்.
விழாவில் மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:
அனைத்து இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத்திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் பாகுபாடு உள்ளது. அரசு பள்ளிகளில் சாதி, மத, பேதமின்றி சமத்துவம் காணப்படும். படிப்பு, பணம் குறைவாக உள்ளவர்களை வெளியேற்றுவது தான் தனியார் பள்ளிக் கொள்கை. ஆனால், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் ஐ.பி.எஸ்., மற்றும் பல் வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தலைமையாசிரியர் கோரியபடி பொருளியல் பணியிட ஆசிரியர் இந்த வாரத்தில் நியமிக்கப்படுவர். மேலும், கல்வித் துறை சார்பில் இப்பள்ளிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இவ்வாறு கார்மேகம் பேசினார்.
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம்
பள்ளிக் கல்வித்துறையில், முதன்மைக் கல்வி அலுவலர் ஒருவரை, இணை இயக்குனராக பதவி உயர்வு செய்தும், மூன்று இணை இயக்குனர்களை வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்தும், துறைச் செயலர் குற்றாலிங்கம் உத்தரவிட்டுள்ளார். குற்றாலிங்கம் நேற்று வெளியிட்ட அரசாணை: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரியும் நரேஷ், இணை இயக்குனராக பதவி உயர்வு செய்யப்பட்டு, பொது நூலகத் துறையில் நியமிக்கப்படுகிறார். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கார்மேகம் (மேல்நிலைக் கல்வி), அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இணை இயக்குனராக (புதிய பணியிடம்) நியமிக்கப்படுகிறார். தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனராகவும் (மேல்நிலைக் கல்வி), அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் சேதுராமவர்மா, தொடக்க கல்வித்துறை இணை இயக்குனராகவும் மாற்றப்படுகின்றனர். தேர்வுத்துறையில் ஏற்படும் இணை இயக்குனர் காலி பணியிடத்தை, அதே துறையில் மறு மதிப்பீடு பிரிவின் இணை இயக்குனரான கருப்பசாமி, கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது....+2 விடைத்தாளை கிழித்து வீசிய ஆசிரியை சஸ்பெண்ட்
தர்மபுரியில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிளஸ் 2 ஆங்கில விடைத்தாளை கிழித்து கழிவறையில் வீசிய ஆசிரியை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரிய ஆசிரியைகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த மையத்தில் கடந்த 9 ந் தேதி ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. இதற்கு தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியை கனிஅமுது (வயது 40) முதன்மை தேர்வாளராக பணியாற்றினார்.
அவரிடம் திருத்துவதற்காக 15 விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டன. பணி முடிந்து அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் விடைத்தாள்களை ஒப்படைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஆசிரியை கனிஅமுது 14 விடைத்தாள்களை மட்டுமே ஒப்படைத்தார். ஒரு விடைத்தாளை ஒப்படைக்கவில்லை.
இதுகுறித்து விடைத்தாள் திருத்தும் மையத்தின் முகாம் அதிகாரி ரங்கநாதன் ஆசிரியை கனிஅமுதுவிடம் விசாரணை நடத்தினார். அதற்கு அவர், முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரித்ததில், விடைத்தாள் திருத்தும் பணி நடந்தபோது அவர் அடிக்கடி கழிவறைக்கு சென்று வந்தது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த முகாம் அதிகாரி ரங்கநாதன் இதுகுறித்து தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் மையத்திற்கு விரைந்து வந்து ரகசியமாக விசாரித்தார்கள். அப்போது கழிவறையிலும் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு காணாமல் போன விடைத்தாள் கிழித்து எறியப்பட்டு கிடந்தது. அதில் ஒரு பகுதி நனைந்த நிலையில் துண்டுகளாக சிதறிக்கிடந்தது. அவற்றை போலீசார் சேகரித்தனர். மேலும், இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கிழிக்கப்பட்ட விடைத்தாள் தபால் மூலம் தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் கார்மேகம், முகாம் அதிகாரி ரங்கநாதன், ஆசிரியை கனிஅமுது மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.இதைத்தொடர்ந்து ஆசிரியை கனிஅமுதுவை தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிடப்பட்டது.இதற்கிடையே, முகாம் அதிகாரி ரங்கநாதன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், ஆசிரியை கனிஅமுது அரசு சொத்தான தேர்வு விடைத்தாளை சேதப்படுத்தி விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
1400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.139.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1400 ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் கார்மேகம் கூறினார்.
இடைநிலை கல்வி வளர்ச்சி திட்டம் தொடர்பாக 5 நாள் பயிற்சி முகாம், கோவை பீளமேடு இந்துஸ்தான் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.
இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வி இணை இயக்குனர் கார்மேகம், நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம், 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்காக இடைநிலை கல்வி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.139.44 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் 200 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான கட்டிடப் பணிகள் அடுத்த வாரம் துவங்கும்.
இப்பள்ளிகளுக்கு 7 ஆசிரியர்கள் வீதம் 1400 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டடம், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர், ஆய்வகம், கம்ப்யூட்டர் அறை, நூலக வசதிக்காக தலா ரூ.58.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இடைநிலை கல்வி திட்டத்தின்கீழ் 7 நாள் பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 144 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர, மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்காக 44 தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன. ஒரு விடுதியில் 100 மாணவிகள் தங்கலாம். அடுத்த ஆண்டு ஜூனில் விடுதிகள் செயல்பட துவங்கும். இவ்வாறு கார்மேகம் கூறினார்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்: 22-ல் கலந்தாய்வு
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு வரும் 22-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்- ஆசிரியைகள், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் 22-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள கலந்தாய்விற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கலந்தாய்வு ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்றும், புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை, மேல்நிலைப்பள்ளிகள் இணை இயக்குனர் எஸ்.கார்மேகம் வழங்குவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி பணி மூப்பு அடைப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1079 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் செய்முறை தேர்வுகள்
தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் தொடர்பான பயிற்சி முகாம் கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.
அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா நான்கு ஆசிரியர்கள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாம் ஏழு நாட்கள் நடைபெறுகிறது.பணிமனையை பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) கார்மேகம் துவக்கி வைத்து பேசுகையில், 'வரும் 2010-11ம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதில், 10ம் வகுப்புக்கும் இனி செய்முறை தேர்வுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
2011-12ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை, இதற்கென ஒன்பதாம் வகுப்பு முதலே தயார்படுத்த வேண்டியது முக்கியம். இதற்கு அறிவியல் பாடத்திட்டத்தின்படி, பள்ளிகளில் ஆய்வக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள 4,241 பள்ளிகளிலும் ஆய்வக வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மின்சாரம், போன், இன்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டியதும் கட்டாயம்.
தற்போது பள்ளிகளில் வாங்கப்படும் செய்தி பத்திரிகைகள் மற்றும் இதழ்களை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வாட்ச்மேன் மட்டுமே படிக்கும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு எந்த வகையிலும் இவை பயன் அளிப்பதில்லை. மாணவர்களின் வாசிப்புத் திறனையும் அறிவுத் திறனையும் மேம்படுத்த, அனைத்து மாணவர்களுக்கும் நல்ல பத்திரிகைகள் சென்றடைவது முக்கியம்.
அனைத்து பள்ளிகளின் புள்ளி விவரங்களையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளின் விவரங்களை மையமாகக் கொண்டு 32 மாவட்டங்களிலும், 'பர்சனல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது' என்றார்.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங்
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், சென்னையில் நேற்று நடந்தது. 413 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.சென்னை அசோக்நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நேற்று கவுன்சிலிங் நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் வந்திருந்தனர். காலையில், காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்பின், இணை இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், கார்மேகம், தர்ம.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்கள், தலா 10 மாவட்டங்கள் வீதம் கவுன்சிலிங்கை நடத்தின. மாவட்டத்திற்குள் 273 தலைமை ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு 140 தலைமை ஆசிரியர்களும் என 413 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர். அவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம், மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.சென்னை மாவட்ட அளவிலான கவுன்சிலிங், முதன்மைக் கல்வி அலுவலர் நரேஷ் தலைமையில், சைதாப்பேட்டையில் நடந்தது. இதில், 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 44 'மாதிரி பள்ளிகள்'மாணவியருக்கு இலவச விடுதிகள்:பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தகவல்
தமிழகத்தில், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன், 44 "மாதிரிப் பள்ளிகள்' கட்டப்பட உள்ளன. மாணவியர் தங்கிப் படிக்க இலவச விடுதி வசதி செய்துதரப்படும் என, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் இடைநிலைக் கல்வி மேலாண்மை தகவல் திட்டங்களுக்கு, 2010-2011ம் ஆண்டுக்கான திட்டம் மற்றும் தகவல் தயாரிப்பு பணிமனை, கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர்(மேல்நிலைக் கல்வி) கார்மேகம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின்படி, தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில், 44 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது 18 பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள பள்ளிகளை அமைப்பதற்கான, இடங்களை தேர்வு செய்தபின், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எஸ்.எஸ்.ஏ., போல ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் 9, 10 ஆகிய வகுப்புகளில் செயல்படுத்தப்படும். மாணவியருக்கு விடுதி: எட்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் 9, 10 வகுப்புகளை பூர்த்தி செய்வது, இத்திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்படும். பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைத்து பள்ளி மாணவருக்கும் அனைத்து திறனும் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக, தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தண்ணீர்,கழிப்பறை வசதிகள் வழங்கி மேம்படுத்தப்படவுள்ளன. பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையிலான தூரம் காரணமாக, படிப்பைத் தொடர முடியாமல் உள்ள பெண் குழந்தைகளுக்கென, இலவச உணவுடன் விடுதிகள் கட்டித்தரப்படும். இத் திட்டத்துக்காக, முதல் கட்டமாக மூன்று கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் 10 லட்ச ரூபாய் சில நாட்களில் வழங்கப்பட்டு விடும். மத்திய அரசு நிதியுடன், மாநில அரசு வழங்கும் ஒரு கோடி ரூபாய் சேர்த்து, நான்கு கோடி ரூபாய் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்த, மாவட்ட, பள்ளிகள் அளவில் விரைவில் "பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு' அமைக்கப் படும். இவ்வாறு கார்மேகம் பேசினார்.
10, 12-வது வகுப்பு தேர்வுகள் சிறப்பாக நடக்க வினாத்தாள், தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
10-வது வகுப்பு, மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்த வினாத்தாள் மையங்களுக்கும், தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வுத்துறைக்கு ரூ.92 லட்சம் செலவில் மதிப்பெண் அட்டவணை பணிக்கூடம் கட்டப்பட்டது. மேலும் ரூ.20 லட்சம் செலவில் கம்ப்ïட்டர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இருமையங்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பி.ஏ.ராமையா, உறுப்பினர் செயலாளர் கண்ணன், தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம், பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, சமச்சீர்கல்வி நிர்வாகியும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனருமான ஜெகநாதன், மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர்மணி, முறைசாரா கல்வி இயக்குனர் லட்சுமி, கல்வித்துறை இணை இயக்குனர்கள் அறிவொளி, இளங்கோ, ராஜராஜேஸ்வரி, ராஜேந்திரன், கார்மேகம், ராமேஸ்வர முருகன், கருணாகரன், செந்தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
A two day Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) workshop was held in the premises of Sushil Hari International Residential School.
The workshop conducted under the leadership of Dr. P. Perumalsamy, Director of School Education, was attended by Chief Educational Officers and respective Planning Teams from all the 32 districts of Tamil Nadu.
The focus of the workshop was to evolve a first perspective draft plan for Secondary education in the State.
Joint Director, Higher Secondary Education Mr. S. Karmegam and Joint Director, Secondary Education Dr. D. Rajendran also participated in the workshop.
All facilities for the workshop including arrangements for stay and food for all the 200 participants was sponsored by Sushil Hari International Residential School.
Air conditioned class rooms of the School were used extensively for discussions among the Planning teams from the respective districts.
State RMSA meet
A two day Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) workshop was held in the premises of Sushil Hari International Residential School.
The workshop conducted under the leadership of Dr. P. Perumalsamy, Director of School Education, was attended by Chief Educational Officers and respective Planning Teams from all the 32 districts of Tamil Nadu.
The focus of the workshop was to evolve a first perspective draft plan for Secondary education in the State.
Joint Director, Higher Secondary Education Mr. S. Karmegam and Joint Director, Secondary Education Dr. D. Rajendran also participated in the workshop.
All facilities for the workshop including arrangements for stay and food for all the 200 participants was sponsored by Sushil Hari International Residential School.
Air conditioned class rooms of the School were used extensively for discussions among the Planning teams from the respective districts.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||