ஜெர்மனியை சேர்ந்த இன்ஜினியர்கள், சகாரா பாலைவனத்தில், சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை நிறுவ, திட்டமிட்டுள்ளனர்.இந்த சூரிய சக்தி திட்டம் மூலம் உலகத்திற்கே மின்சாரம் வினியோகம் செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சகாரா பாலைவனத்தில், 35 லட்சம் சதுர மைல் பரப்பளவை, இந்த திட்டத்திற்காக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயன்படுத்த உள்ளனர். இது சகாரா பாலைவனத்தின் மொத்த பரப்பளவில் 1 சதவீதம்.இதுகுறித்து, டிஸ்கவரி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தி:இந்த திட்டத்திற்காக, குழாய் போன்ற அமைப் புடைய பாரபோலிக் ட்ரப் எனும் சாதனத்தை பயன் படுத்தி, சூரிய வெப்பத்தை சேகரித்து, அதற்கென இருக்கும் பிரத்யேக தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்க வல்லுனர்கள் திட்டமிட்டுள்ளனர். வரும் 2050ம் ஆண்டு, ஐரோப்பாவின் மின்சாரத் தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்வதே, இந்த திட்டத்தின் முதல் நோக்கம். சகாரா பாலைவனத்தில் இருந்து ஐரோப்பாவிற்கு மின்சாரத்தை கொண்டு செல்வது தான் பிரச்னையாக கருதப்படுகிறது. இதற்கும் தீர்வு காணுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||