நடப்பு ஆண்டுக்கான சிறந்த உலகத் தலைவர் விருது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த அப்பீல் ஆஃப் கன்சைன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தனது இல்லத்தில் நேற்று நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்காவின் முன்னாள் அயலுறவுத் துறை இணை அமைச்சர் ஜான் நெக்ரோபான்ட் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்த விருதினை பிரதமர் மன்மோகன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என மீரா சங்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரௌன் (2009), பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி (2008), ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் (2007), பிரேசில் அதிபர் லூலா டி சில்வா (2006) ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||