நிலவுக்கு மனிதனைக் கொண்டு செல்லுதல் மற்றும் நிலவின் வேதியியல் தன்மையைக் கண்டறியும் வகையில் இரண்டாம் சந்திரயான் செயற்கைக்கோள் வடிவமைக்கப்படும் என, சந்திரயான் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:நிலவைப் பற்றி கண்டறிய ஏவப்பட்ட சந்திரயான் செயற்கைக்கோளின் வெற்றிகரமான பயணத்தை அடுத்து, மக்கள் மத்தியில் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பெற்றோரிடமும் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தங்கள் குழந்தைகளை விமானத் தொழில்நுட்பமான "ஏரோ நாட்டிகல்ஸ்' மற்றும் விண்வெளித் துறைகளில் சேர்க்க முன் வருகின்றனர். இது விண்வெளி ஆராய்ச்சிக்குச் சாதகமான அம்சம்.தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விண்வெளிப் பயன்பாடு அதிகரிக்கும்போது விண்வெளி செல்வதற்கான செலவு குறையும். அப்போது அதிக மக்கள் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்வர்.விண்வெளியில் ஆய்வு மையம் அமைத்து அதைப் பராமரிப்பது மிகவும் கடினமானது. நிலவில் ஆய்வு மையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, 2012ம் ஆண்டு சந்திரயான் 2 செயற்கைக்கோள் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் 2 திட்டத்துக்கான முதற்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.எரிபொருள் பற்றாக்குறை ஹீலியம் மாற்று எரிபொருளாக பயன்படுத்தப்படும். நிலவில் ஹீலியம் உள்ளதால் அதைக் கொண்டு மாற்று எரிபொருள் தயாரிக்க ஆய்வு செய்யப்படுகிறது.நிலவுக்கு மனிதனைக் கொண்டு செல்லுதல் மற்றும் நிலவின் வேதியியல் தன்மையைக் கண்டறியும் வகையில் இரண்டாம் சந்திரயான் செயற்கைக்கோள் வடிவமைக்கப்படும்.இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||