பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, 46 மையங்களில் நடக்கின்றன. முக்கியப் பாடங்களுக்கு, "டம்மி' எண்கள் கொடுக்கும் பணி, வரும் 20ம் தேதி துவங்குகிறது. அப்பணி முடிந்ததும், ஏப்ரல் 3ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும்.
கடந்த முதல் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு ஆரம்பித்தது. மொழிப்பாட தேர்வுகள், இயற்பியல், பொருளியில், வேதியியல், கணக்குப் பதிவியல், புள்ளியியல், கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி ஆகிய தேர்வுகள் முடிந்து விட்டன. இன்று கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.நாளை மறுதினம் உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகளும், இறுதியாக 22ம் தேதி வணிகவியல், புவியியல், "ஹோம் சயின்ஸ்' தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.
23ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்குகின்றன.பிளஸ் 2வில் பெரும்பாலான தேர்வுகள் முடிந்ததையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 20ம் தேதி துவங்குகிறது. தொழிற்கல்விப் பாடங்கள் அல்லாத பாடங்கள் 44 மையங்களிலும், தொழிற் கல்விப் பாடங்கள் இரண்டு மையங்களிலும் திருத்தப் படுகின்றன. முதலில், அறிவியல், கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு, "டம்மி' எண்கள் கொடுக்கும் பணி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 3ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.ஒரு மையத்திற்கு 350 பேர் வீதம், 46 மையங்களில் 16 ஆயிரத்து 100 ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும், "கீ-ஆன்சர்' தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த, "கீ-ஆன்சரில்' சம்பந்தப் பட்ட பாடங்களின் கேள்விகள், அதற்கான விடைகள் ஆகியவை தரப்பட்டிருக்கும்.
இதில் உள்ள விடைகளின்படி, ஆசிரியர்கள் விடைத்தாளை திருத்துவர். கணக்குப் பதிவியல், கணிதம் ஆகிய தேர்வுகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வேதியியலில் ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், ஒரு கேள்விக்கு சரியான பதிலை தராதது, பத்து மதிப்பெண் கேள்வியில், ஐந்து மதிப்பெண்களுக்கான துணைக் கேள்வியில் தவறு போன்ற குளறுபடிகள் இடம் பெற்றன.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||