ராமேஸ்வரம்:"" முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பாடம் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக,'' அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். ராமேஸ்வரம் துவக்கப்பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் நடைபெறும் விதம் குறித்து கேட்டறிந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மற்ற மாவட்டங்களை விட, ராமநாதபுரத்தில் பொதுத் தேர்வில் காப்பியடிப்பது குறைந்துள்ளது. மாணவர்களும் பிரச்னையின்றி தேர்வு எழுதுகின்றனர். இங்கிலாந்தில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் பாடம் நடத்துகின்றனர். இங்கு தற்போது 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பாடம் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் அனைத்து துவக்கப்பள்ளிகளுக்கும் வழங்கப்படும். பள்ளிகளில் மின்சாரம், மின்கட்டணத்துக்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இத்தொகை உதவி தொடக்க கல்வி ஆசிரியர்கள் மூலம் பள்ளி மின்சார கட்டணத்துக்கு பயன்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் மின்இணைப்பு இல்லாத 326 பள்ளிகளுக்கு, மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கல்விக்காக மத்திய அரசிடம் இருந்து 860 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என்றார்
HI SIR NICE WORK BUT DISPLAY COLOUR NOT GOOD I THING U USE RGB COLOUR PLEAS CHANGE CMYK COLOUR
ReplyDelete