புதுடில்லி : "இந்தியாவில் வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில், சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது' என, இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு, "வாழும் திறன் குறியீடு 2010' என்ற தலைப்பின் கீழ், ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், 37 நகரங்கள் தரவரிசைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள் ளது. ஒரு நகரில் அமைந்துள்ள வாழ்க்கைத் தரம், சமூக - கலாசார சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவ தரம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உட் பட, பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் வாழ்வதற்கான சிறந்த நகரம் டில்லி. இந்த நகரம் கல்வி, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் முன்னணியில் உள் ளது. வீட்டு வசதி வாய்ப்புகள், சமூக கலாசார அரசியல் சூழலில் இரண்டாம் இடம் வகிக்கிறது.வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் தரவரிசைப் பட்டியலில், டில்லியை அடுத்து இரண்டாம் இடத்தில் மும்பையும், மூன்றாம் இடத்தில் சென்னையும் உள்ளது.இந்நகரங்களை தொடர்ந்து, பெங்களூரு, கோல்கட்டா, ஐதராபாத், ஆமதாபாத், புனே மற்றும் குர்கான் நகரங்கள் முறையே நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடம் வகிக்கின்றன. ஒட்டு மொத்த வாழ்க்கை தரத்தில், ஜாம்ஷெட்பூர் நகரம், கடைசி இடத்தில் உள்ளது.வாழ்க்கைத் தரம் என்பது நகர்ப்புற மயமாதலை குறிக்கவில்லை. நகரில் வசிக்கும் குடிமக்களின் தரமான வாழ்க்கை, நகரின் உள்கட்டமைப்பு வசதிகள், உணவு, சுத்தமான காற்று, குறைந்த விலையில் வீடுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||