எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,791 தேர்வு மையங்களில் 6,493 பள்ளிகளை சேர்ந்த 8,56,956 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 4,22,523 பேர் மாணவர்கள். 4,34,443 பேர் மாணவிகள்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தனித் தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 14,618 பேர் கூடுதலாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகி்ன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல மெட்ரிகுலேஷன் 10ம் வகுப்பு தேர்வை 1,476 மையங்களில் 3,138 பள்ளிகளைச் சேர்ந்த 1,30,020 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 71,714 பேர் மாணவர்கள். 58,256 பேர் மாணவிகள்.
ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4,492 பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,593 பேரும் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் 7ம் தேதி முடிவடைகின்றன. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதியும் முடிவடைகின்றன.
கால அட்டவணை
மாநில பாடத்திட்டம்
23 .03 .2010 - தமிழ் முதல் தாள்
24 .03 .2010 - தமிழ் இரண்டாம் தாள்
26 .03 .2010 - ஆங்கிலம் முதல் தாள்
29 .03 .2010 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
01 .04 .2010 - கணிதம்
05 .04 .2010 - அறிவியல்
07 .04 .2010 - சமுக அறிவியல்
மெட்ரிக் பாடத்திட்டம்
23 .03 .2010 - தமிழ் முதல் தாள்
24 .03 .2010 - தமிழ் இரண்டாம் தாள்
25 .03 .2010 - ஆங்கிலம் முதல் தாள்
26 .03 .2010 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 .03 .2010 - கணிதம் முதல் தாள்
30 .03 .2010 - கணிதம் இரண்டாம் தாள்
01 .04 .2010 - அறிவியல் முதல் தாள்
05 .04 .2010 - அறிவியல் இரண்டாம் தாள்
07 .04 .2010 - வரலாறு
09 .04 .2010 - புவியியல்
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||