அடுத்த 15 ஆண்டுகளில் நம்நாட்டில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றி போகும் நிலை உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.நம்நாடு விவசாய நாடு என்பதால், ஆற்றுநீர் பாசனத்தை விட நிலத்தடி நீர் மூலம் தான் அதிகம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. உலகத்திலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துவது நம் நாடு தான். நாட்டின் பல பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாத காரணத்தால், தற்போது 29 சதவீத நிலத்தடி நீர் ஆதாரங்கள் வற்றி போகும் சூழல் உள்ளது.வரும் 2025ம் ஆண்டுக்குள் 60 சதவீத நிலத்தடி நீர் ஆதாரங்கள் வறண்டு போகும் நிலை உள்ளது, எனவே, இதை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 5 ஆயிரத்து 723 நிலத்தடி நீர்பாதைகள் உள்ளன. இவற்றில், ஆயிரத்து 615 பாதைகளில் நீரோட்டம் குறைந்து விட்டது. இதில், 108 பாதைகள் அதிக அளவில் நீர் உறிஞ்சப்பட்டதால் வற்றி போய்விட்டன.
இன்னும் 15 ஆண்டுகளில் 60 சதவீத நிலத்தடி நீர் ஊற்று பாதைகள் வற்றி போகும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நீர் ஆதாரங்களை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என உலக வங்கி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.தற்போது, குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் நிறுவனங் கள் அதிகரித்து விட்டன.எனவே, தண்ணீரை அதிகம் பயன் படுத்துவோருக்கு வரி விதிப்பது, குறைவாக பயன்படுத்துவோருக்கு ஊக்கத் தொகை வழங்குவது போன்ற நடவடிக்கையின் மூலம் தண்ணீர் பயன் பாட்டை கட்டுப்படுத்தலாம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், காசு கொடுத்து தண்ணீர் வாங்கக்கூட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும், என இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||